ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் : ஷேவாக்

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் துபாயில் நடைபெற உள்ளது;

Update:2025-08-23 06:29 IST

கராச்சி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்.14-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் , ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ேஷவாக் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சரியான கலவையில் இருக்கிறது. அத்துடன் சூர்யகுமார் யாதவின் அச்சமில்லா கேப்டன்ஷிப்பில், ஆசிய போட்டியில் இந்திய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தும். அவரது ஆக்ரோஷமான மனநிலை 20 ஓவர் வடிவிலான போட்டிக்கு பொருத்தமானது. அணியினரும் அதே நோக்கத்துடன் ஆடினால், இந்தியா கோப்பையை வெல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்