சர்வதேச டி20 கிரிக்கெட்: 13 பந்துகளில் அரைசதம்.. நமீபியா வீரர் மாபெரும் சாதனை

இந்த சாதனையில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 2-வது இடத்தில் உள்ளார்.;

Update:2025-09-19 09:11 IST

image courtesy:ICC

புலவாயோ,

நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஜிம்பாப்வே அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜான் பிரைலிங்க் 31 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார்.

ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 13 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தை ஆஸ்திரியாவின் மிர்சா ஆஷன், துருக்கியின் முகமது பஹத், ஜிம்பாப்வேயின் மருமணி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

அந்த பட்டியல்:

1. திபேந்திர சிங் அய்ரீ - 9 பந்துகள்

2. யுவராஜ் சிங் - 12 பந்துகள்

3.மிர்சா ஆஷன்/ முகமது பஹத்/மருமணி/ ஜான் பிரைலிங்க் - 13 பந்துகள்

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 176 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நமீபியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்