ஐபிஎல்: லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்

62 வயதான அவர் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.;

Update:2025-07-31 02:30 IST

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக கடந்த 4 வருடங்களாக இருந்து வந்த பரத் அருண் அந்த பொறுப்பில் இருந்து விலகி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைந்து இருக்கிறார்.

'ஒவ்வொரு மட்டத்திலும் தொழில்முறை, லட்சியம் மற்றும் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் நிர்வாகத்துக்குரிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைவதை கவுரவமாக கருதுகிறேன்' என்று பரத் அருண் தெரிவித்துள்ளார். 62 வயதான அவர் 2014-15, 2017-21-ம் ஆண்டுகளில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்