ஐ.பி.எல்.: கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகல்
கொல்கத்தா அணி 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.;
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டு நடந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் 5 வெற்றி மட்டுமே பெற்று 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 சீசன்களாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய மும்பையை சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து நேற்று விலகினார். அவரது வழிகாட்டுதலில் கொல்கத்தா அணி 2024-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த அணியின் உதவி பயிற்சியாளராக இருக்கும் அபிஷேக் நாயர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.