ஐ.பி.எல். இறுதிப்போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.;

Update:2025-06-03 19:03 IST

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. இதன் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.

அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

பஞ்சாப் கிங்ஸ்: பிரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), நேஹால் வதேரா, ஷசாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

Tags:    

மேலும் செய்திகள்