ஐ.பி.எல்.: ரவீந்திரா முதல் மேக்ஸ்வெல் வரை.. 10 அணிகளும் விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மினி ஏலம் நடைபெற உள்ளது.;
சென்னை,
19-வது ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்காக தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் விவரத்தை இன்று ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் சில அணிகள் வீரர்களை தங்களுக்குள் டிரேடிங் செய்து கொண்டன. அதில் சிஎஸ்கே அணி ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 10 அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்து விட்டன. அவற்றின் முழு விவரம் குறித்து இங்கு காணலாம்...!
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரனா, டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், அந்த்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி.
ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: லியாம் லிவிங்ஸ்டன், ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், டிம் சீபர்ட், மனோஜ் பந்தேகே, லுங்கி நிகிடி, பிளஸ்ஸிங் முசரபானி, மோஹித் ரதி
மும்பை இந்தியன்ஸ்: எஸ் ராஜு, ஆர் டாப்லி, கேஎல் ஸ்ரீஜித், கர்ண் ஷர்மா, பி ஜேக்கப், எம் ரஹ்மான், எல் வில்லியம்ஸ், வி புதூர்.
அர்ஜுன் தெண்டுல்கரை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்: தசுன் ஷனகா, மஹிபால் லோம்ரோர், கரீம் ஜனத், ஜெரால்ட் கோட்ஸி, குல்வந்த் கெஜ்ரோலியா
ரூதர்போர்டை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபினவ் மனோகர், அதர்வா டைடே, சச்சின் பேபி, வியான் முல்டர், சிமர்ஜீத் சிங், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா.
முகமது ஷமியை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, கிளென் மேக்ஸ்வெல், குல்தீப் சென், பிரவீன் துபே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரசல், வெங்கடேஷ் ஐயர், மொயின் அலி, குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், லுவ்னித் சிசோடியா, சேத்தன் சகாரியா, அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன்.
மயங்க் மார்கண்டேவை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஆர்யன் ஜூயல், டேவிட் மில்லர், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய்.
ஷர்துல் தாகூரை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: குணால் சிங் ரத்தோர், வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, பசல்ஹக் பரூக்கி, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா, குமார் கார்த்திகேயா.
நிதிஷ் ராணா மற்றும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்: பாப் டு பிளெசிஸ், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், செடிகுல்லா அடல், மன்வந்த் குமார், மோஹித் சர்மா, தர்ஷன் நல்கண்டே
டோனோவன் பெரீராவை டிரேடிங் முறையில் வெளியேற்றியுள்ளது.