ஐ.பி.எல்.: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.;

Update:2025-05-18 19:04 IST

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது.

இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்