ஐ.பி.எல்: ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் வைத்துள்ள இருப்புத்தொகை எவ்வளவு..?

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் மினி ஏலம் நடைபெற உள்ளது.;

Update:2025-11-16 14:56 IST

image courtesy:IPL

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நேற்று (நவ.15-ந் தேதி) மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தக்கவைக்கப்படாத வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்க மொத்தம் ரூ.125 கோடியை செலவிடலாம். வீரர்கள் தக்க வைத்தது போக மீதம் இருக்கும் தொகையை வைத்து எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைத்தது போக மீதம் இருக்கும் தொகை குறித்து காணலாம்..!

1. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 64.30 கோடி

2. சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 43.40 கோடி

3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ. 25.50 கோடி

4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ. 22.95 கோடி

5. டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 21.80 கோடி

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.16.40 கோடி

7. ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 16.05 கோடி

8. குஜராத் டைட்டன்ஸ் - ரூ. 12.90 கோடி

9. பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 11.50 கோடி

10. மும்பை இந்தியன்ஸ் - ரூ.2.75 கோடி 

Tags:    

மேலும் செய்திகள்