ஐ.பி.எல்.: பஞ்சாப் அணிக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி

பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் அடித்தார்.;

Update:2025-06-03 21:48 IST

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் களமிறங்கி உள்ளது.

விராட் கோலி இந்த ஆட்டத்தில் அடித்த 43 ரன்களையும் சேர்த்து ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக இதுவரை 1159 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 1,134 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள விராட் புதிய சாதனை படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்