அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டி20 போட்டி மழையால் ரத்து

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.;

Update:2025-06-15 13:09 IST

image courtesy: @cricketireland

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்த ஆட்டமும் (டாஸ் கூட போடாமல்) மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்