உள்ளூர் கிரிக்கெட்டில் விராட், ரோகித் விளையாடியதால்தான்... அஸ்வின்
டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.;
சென்னை ,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடினர். டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடியது பற்றி முன்னாள் வீரர் அஸ்வின் கூறியதாவது,
2027 உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் இடம் இருக்கிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அந்த இடம் இல்லை என நினைக்கிறேன்.
விஜய் ஹசாரே கோப்பை என்பது பொதுவாக அதிகமானோர் பின்தொடராத ஒரு உள்நாட்டு போட்டி. ஆனால் விராட், ரோகித்விளையாடியதால் தான் மக்கள் அதை கவனித்தனர்.
விளையாட்டு என்பது எப்போதும் தனிநபர்களை விட பெரியது என்பது நமக்குத் தெரியும். ஆனால் சில நேரங்களில், விளையாட்டை தொடர்புடையதாக வைத்திருக்க, இத்தகைய வீரர்கள் மீண்டும் வர வேண்டிய நிலை உருவாகிறது.அப்படியானால், அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகினால் என்ன நடக்கும்? . என தெரிவித்தார்.