எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்வது முக்கியம் - கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது , கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
அதனை மறக்கவும் கூடாது. நான் இந்திய வீரர்களிடமும் இதையே கூறியுள்ளேன். எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்வது முக்கியம். அதேபோல் சில நேரங்களில் கடந்த காலத்தில் நடந்ததை நினைவில் வைத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.