2 நாளில் ஆட்டம் முடிந்தது அதிர்ச்சியாக இருக்கிறது....இங்கிலாந்து கேப்டன்
டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.;
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் .முதல் நாளில் 19 விக்கெட்சரிந்த இந்த டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் , தொடர்பாக பேசிய இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியதாவது,
‘2 நாளில் ஆட்டம் முடிந்தது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது. டிராவிஸ் ஹெட்டின் இன்னிங்ஸ் அற்புதம். தைரியமாக ஆடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்து விட்டார். அவரை கட்டுப்படுத்த 3-4 திட்டங்களை முயற்சித்து பார்த்தோம். ஆனால் ரெயில் மாதிரி அதிவேகமாக செல்லும் போது தடுத்து நிறுத்துவது கடினம். இன்னும்4 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. 2-வது டெஸ்டுக்கு நிறைய நாட்கள் உள்ளன. அதற்கு தேவையான வியூகங்களை வகுப்போம்’ என்றார்.