சென்னை அணியில் இருந்து விலக விரும்பிய ஜடேஜா....வெளியான பரபரப்பு தகவல்

ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தானுக்கு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது;

Update:2025-11-16 09:41 IST

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

Advertising
Advertising

அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது. சென்னை நிர்வாகமும் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தானுக்கு கொடுத்து விட்டு சஞ்சு சாம்சனை அணி வாங்கியுள்ளது. ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கர்ரனை ரூ.2.4 கோடிக்கும் ராஜஸ்தான் வாங்கியுள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்றி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சென்னை அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு வர ஜடேஜா விரும்பியதாக அந்த அணியின் உரிமையாளர் மனோஜ் படலே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

4 வாரங்களுக்கு முன்பு ஜடேஜா என்னை தொடர்பு கொண்டார். அவர் மீண்டும் ராஜஸ்தான் அணிக்கு திரும்ப வருவது குறித்து யோசித்து வருவதாக கூறினார். அதன்பிறகுதான் அனைத்துமே தொடங்கியது. இங்குதான் அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார்.

கடைசியாக 21 வயது இளம் வீரராக பார்த்தேன், தற்போது மீண்டும் னுபவம் மிக்க இளம் வீரராக அவரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. என தெரிவித்தார் .

இதனால், ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஜடேஜா விரும்பியதால் தான் அவரை சென்னை அணி டிரேடிங் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்