ஐபிஎல் 2026: சென்னை அணி விடுவித்த வீரர்கள் பட்டியல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதீஷா பதிரனா உள்ளிட்ட 11 வீரர்களை சென்னை அணி விடுவித்துள்ளது.;

Update:2025-11-15 18:38 IST

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை இன்றுக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்தது.

முன்னதாக கடந்த சீசனில் (18-வது சீசன்) ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் சென்னை அணி 11 வீரர்களை விடுவித்துள்ளது. சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ள வீரர்கள்:

ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா, டிவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், ராகுல் திரிப்பாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், அந்த்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி

இதன் மூலம் சென்னை அணி 43.4 கோடி தொகையுடன் ஐபிஎல் மின் ஏலத்தில் பங்கேற்கும்.

முன்னதாக, சென்னை அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் அணியிடம் கொடுத்து, அந்த அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்