3வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - இலங்கை இன்று மோதல்

ராவல்பிண்டியிலுள்ள மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி துவங்குகிறது.;

Update:2025-11-16 04:09 IST

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராவல்பிண்டியிலுள்ள மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி துவங்குகிறது.

இந்த போட்டியிலும் வெற்றிபெற்று பாகிஸ்தான் முனைப்பு காட்டும். அதேவேளை, ஆறுதல் வெற்றிபெற இலங்கை போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்