இந்திய கிரிக்கெட்டில் முதல் வீரர்: வரலாற்று சாதனை படைத்த பும்ரா
தென் ஆப்பிரிக்காவை வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.;
புவனேஷ்வர்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
பும்ரா டெஸ்ட்டில் 234 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் நேற்று நடந்த டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.