மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு - மும்பை இன்று மோதல்
மகளிர் பிரீமியர் லீக் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.;
காந்தி நகர்,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இன்று நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு பெங்களூரு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. அதேவேளை, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க மும்பை இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டியுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.