புஜாராவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி; காரணம் என்ன?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் புஜாரா;
டெல்லி,
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் புஜாரா (வயது 37). இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் நன்றியும், வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புஜாராவுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், கிரிக்கெட்டில் 4வது களமிறங்கும் எனக்கு வேலையை சுலபமாக்கிய புஜாராவுக்கு நன்றி. நீங்கள் மிகச்சிறந்த கிரிக்கெட் வரலாற்றை கொண்டுள்ளீர்கள். வாழ்க்கையில் உங்கள் அடுத்த முடிவுகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் புஜாரா
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.