கொல்கத்தா அபார பந்துவீச்சு... ராஜஸ்தான் 151 ரன்கள் சேர்ப்பு

ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 33 ரன் எடுத்தார்.;

Update:2025-03-26 21:17 IST

Image Courtesy: @IPL

கவுகாத்தி,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ராஜஸ்தானின் தொடக்க வீரர்களாக சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் களம் புகுந்தனர். இதில் சாம்சன் 13 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ரியான் பராக் களம் இறங்கினார். அவர் 25 ரன்னில் அவுட் ஆனார்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஸ்வால் 29 ரன்னிலும், அடுத்து வந்த ஹசரங்கா 4 ரன்னிலும், நிதிஷ் ராணா 8 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஷுபம் துபே களம் புகுந்தார். அவர் 9 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜுரெல் 33 ரன்னிலும், அடுத்து வந்த ஹெட்மையர் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மகேஷ் தீக்சனா ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 33 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்