லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2025-08-01 07:14 IST

Image Courtesy: X(Twitter) / File Image

பர்மிங்காம்,

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் - ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்ந்து 186 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வான் விக் 76 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சிடில் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 187 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 35 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் விஜோயன், பார்னெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் - தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்