மேஜர் லீக் கிரிக்கெட்; இறுதிப்போட்டியில் வாஷிங்டன் பிரீடம் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் இன்று மோதல்

6 அணிகள் இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-13 11:30 IST

Image Courtesy: @MLCricket

டல்லாஸ்,

6 அணிகள் இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக், நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிவில் மேக்ஸ்வெல் தலைமையிலான வாஷிங்டன் பிரீடம், பூரன் தலைமையிலான எம்.ஐ. நியூயார்க் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், மகுடம் யாருக்கு என்பதை தீர்மானிகும் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் பிரீடம் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் டல்லாஸில் இன்று மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags:    

மேலும் செய்திகள்