சென்னைக்கு எதிரான ஆட்டம்: சதமடித்து அசத்திய பிரியன்ஷ் ஆர்யா
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன.;
முல்லான்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெற்று வரும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர்.
இதில் தொடக்கம் முதலே பிரியன்ஷ் ஆர்யா சென்னை பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டார். பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் இவர் அதிரடியை குறைக்கவில்லை. வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சென்னை பந்துவீச்சை சிதறடித்த பிரியன்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதம் விளாசினார். சதமடித்த 3 -வது பந்திலேயே ஆட்டமிழந்தார். வெறும் 42 பந்துகளை மட்டுமெ எதிர்கொண்ட அவர் 103 ரன்களில் (7 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள்) ஆட்டமிழந்தார்.
தற்போது அவரை பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது.