ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்

ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.;

Update:2025-03-30 19:26 IST

image courtesy:twitter/@IPL

கவுகாத்தி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டிக்கான சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாம் கரனுக்கு பதிலாக ஜேமி ஓவர்டானும், தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கரும் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணியில் மாற்றமில்லை.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, ஜேமி ஓவர்டான், ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, மதீஷா பதிரனா, கலீல் அகமது.

ராஜஸ்தான்: ரியான் பராக் (கேப்டன்), ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மேயர், வனிந்து ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.

Tags:    

மேலும் செய்திகள்