மேக்ஸ்வெல் அபார சதம்; நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய வாஷிங்டன் ப்ரீடம்

வாஷிங்டன் தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.;

Update:2025-06-18 10:33 IST

image courtesy: @MLCricket

கலிபோர்னியா,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் ப்ரீடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் மேக்ஸ்வெல் 49 பந்தில் 106 ரன்கள் எடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் தரப்பில் கார்ன் டிரை, தன்சீர் சங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் வாஷிங்டன் அணி அபார வெற்றி பெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் தரப்பில் சைப் படார் 32 ரன் எடுத்தார். வாஷிங்டன் தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்