அன்னையர் தினம்: சச்சின் தெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு
என்னுடைய அம்மா எனக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருந்துள்ளார் என்று சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.;
மும்பை,
சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்பையும் அரவணைப்பையும் தரும் தாயை போற்றி பலர் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:
நான் தொடங்கும் அனைத்து விஷயங்களும் என்னுடைய அம்மாவின் பிரார்த்தனையுடனும், அவரது வலிமையுடனும் தொடங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களது அம்மா பக்கபலமாக இருப்பது போன்று என்னுடைய அம்மாவும் எனக்கு எப்போதும் ஊக்கம் அளிப்பவராக இருந்துள்ளார். குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் அம்மாக்கள் அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.