ஒருநாள் கிரிக்கெட்: ஆல் டைம் இந்தியா - ஆஸி. ஒருங்கிணைந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்த கம்மின்ஸ்
கம்மின்ஸ் தேர்வு செய்த அணியில் 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.;
image courtesy:PTI
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.
அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை கொண்டு இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த பிளேயிங் லெவனை பேட் கம்மின்ஸ் தேர்வு செய்துள்ளார்.
அவரது அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வு செய்யாத அவர் தன்னையும் அந்த அணியில் தேர்வு செய்யவில்லை. அத்துடன் கம்மின்ஸ் தேர்வு செய்த அணியில் சச்சின், மகேந்திரசிங் தோனி மற்றும் ஜாகீர் கான் ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
கம்மின்ஸ் தேர்வு செய்த இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த பிளேயிங் லெவன்:
டேவிட் வார்னர், சச்சின் தெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன், மைக்கேல் பெவன், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), பிரட் லீ, ஷேன் வார்னே, ஜாகீர் கான், கிளென் மெக்ராத்.