சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து
அவரது தடுப்பாட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புஜாரா இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த வீரராக விளங்கினார் . அவரது தடுப்பாட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 8வது அதிக ரன்கள் எடுத்த வீரராக புஜாரா ஓய்வு பெற்றார். 19 சதங்கள் உட்பட 43.60 சராசரியாக 7,195 ரன்கள் எடுத்துள்ளார் .
இந்த நிலையில் புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். நம் சிறப்பான டெஸ்ட் வெற்றிகளை எப்போதும் ஒன்றாகப் போற்றுவேன்.உங்களின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார் .