மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்பும் ரஹானே
ரஹானே கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார்.;
image courtesy:PTI
லண்டன்,
இந்திய மூத்த கிரிக்கெட் வீரர் அஜிங்யா ரஹானே கடைசியாக 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன் பிறகு அணியில் இருந்து ஓரங்கப்பட்டார். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் 85 டெஸ்டில் விளையாடிய அனுபவசாலியான 37 வயதான ரஹானே லண்டனில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,
நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட மிகவும் ஆர்வமாக உள்ளேன். தற்சமயம் எனது கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன். என்னை பொறுத்தவரை எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய தேர்வு குழுவினரிடம் பேச முயற்சித்தேன்.
ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வீரராக என்னால் தொடர்ந்து உற்சாகமாக விளையாட முடியும். சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதை மிகவும் நேசிக்கிறேன். அடுத்து உள்ளூர் சீசன் தொடங்குகிறது. அதற்கு தயாராகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.