ஆர்.சி.பி வெற்றிப்பேரணி... போதிய முன் ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்ய தவறியுள்ளது - வானதி சீனிவாசன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.;

Update:2025-06-05 00:30 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வெற்றி பெற்றதையொட்டி, இன்று (நேற்று) மாலை கர்நாடக மாவட்டம் பெங்களூரில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் ஒரு பெண் உட்பட 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். போதிய முன் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகளை கர்நாடக அரசு செய்ய தவறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்