டாப் 2 இடத்தை பிடிப்பது மிகவும் அவசியம்; பெங்களூரு பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.;

Update:2025-05-27 18:55 IST

லக்னோ,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 70வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் டாப் 2 இடத்திற்குள் சென்றுவிடும்.

இந்நிலையில், டாப் 2 இடத்தை பிடிப்பது பெங்களூருவுக்கு மிகவும் அவசியம் என்று அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டாப் 2 இடத்தை பிடிப்பது மிகவும் அவசியம். அதுதான் நமது அணிக்கு வேண்டும் அதற்காகத்தான் நாம் கடுமையாக உழைக்கிறோம். பல்வேறு நிலைகளில் நாம் குறிப்பிட்ட இலக்குகளை கொண்டு விளையாடினோம். ஆனால், சில ஆட்டங்களுக்குமுன் நாம் டாப் 2 இடத்தை பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். டாப் 2 இடத்தை பிடிக்க நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்