கவுரவ டாக்டர் பட்டம் பெறும் ரோகித் சர்மா
ரோகித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் .;
மும்பை,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் , டி20, போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.இவரது தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை , சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ரோகித் சர்மா இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் அளவற்ற பங்களிப்பு மற்றும் தலைமைப் பண்பை அங்கீகரித்து டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை அறிவித்துள்ளது.