ஒருநாள் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த டேரில் மிட்செல்

கடந்த வாரம் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியாவின் விராட் கோலி (795 புள்ளி) 2-வது இடத்துக்கு சறுக்கினார்;

Update:2026-01-22 13:58 IST

துபாய்,

ஒருநாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (845 புள்ளி) முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் சதங்கள் (131 மற்றும் 137 ரன்) அடித்ததன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார். 

கடந்த வாரம் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியாவின் விராட் கோலி (795 புள்ளி) 2-வது இடத்துக்கு சறுக்கினார். ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் ஜட்ரன் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீரர் ரோகித் சர்மா 4-வது இடத்துக்கு சரிந்தார். சுப்மன் கில் 5-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 10-வது இடத்திலும் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்