பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.;
மெல்போர்ன்,
பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன. பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள போட்டிகளில் பாபர் அசாம் பங்கேற்க மாட்டார் என சிட்னி சிக்சர்ஸ் அணி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளதால் இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரன்கள் எடுப்பதில் ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம் இருவருக்கும் இடையே கசப்பான அனுபவம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.