பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு

பாகிஸ்தான் அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பில் பெரிய அளவில் முரண்பாடு இருப்பதை தணிக்கை துறை கண்டறிந்துள்ளது.;

Update:2025-07-17 08:06 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் 2023-24-ம் ஆண்டு நிதியாண்டில் ரூ.180 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதை தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பில் பெரிய அளவில் முரண்பாடு இருப்பதை தணிக்கை துறை கண்டறிந்துள்ளது.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இந்த போட்டியில் சர்வதேச அணிகளுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தனியார் ஊழியர்களின் உணவுக்காக மட்டும் ஏறக்குறைய ரூ.2 கோடி செலவிடப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வெளிநாட்டு அணிகளின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு. அதற்கான செலவினம் கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்டது அல்ல எனவும் தணிக்கை துறை திட்டவட்டமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக மொசின் நக்வி இருக்கிறார். அவர் அந்த நாட்டு மந்திரியாகவும் உள்ளார். இந்த முறைகேடு குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்