நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.;

Update:2026-01-14 13:30 IST

ராஜ்கோட்,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு நிதிஷ்குமார் ரெட்டி இடம் பிடித்துள்ளார்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

நியூசிலாந்து: டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே(விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல்(கேப்டன்), ஜகரி ஃபோல்க்ஸ், ஜெய்டன் லெனாக்ஸ், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க்

இந்தியா : ரோஹித் சர்மா, ஷுப்மான் கில்(கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

Tags:    

மேலும் செய்திகள்