எஸ்.ஏ. டி20 லீக் : டு பிளிஸ்சிஸ் விலகல்
ஜோபர்க் அணி 17 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.;
கேப்டவுன்,
தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்.ஏ. டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் செயல்பட்டு வந்தார். ஜோபர்க் அணி 17 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது.
இந்த நிலையில் அந்த அணிக்கு திடீர் பின்னடைவாக கேப்டன் பிளிஸ்சிஸ் காயத்தால் விலகியுள்ளார். எம்.ஐ. கேப்டவுன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது அவருக்கு வலதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.