ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.;

Update:2026-01-14 15:08 IST

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் அடித்த அவர், தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் 785 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேல் 784 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இந்திய வீரர் ரோகித் சர்மா 3வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜித்ரான் 4வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் கில் 5வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்