டபிள்யூ.பி.எல். வரலாற்றில் முதல் இந்திய வீராங்கனை...சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர்

நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.;

Update:2026-01-14 04:53 IST

மும்பை,

டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.

5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை புறநகரான நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி மும்பைக்கு 193 என்ற கடின்மான இலக்கை நிர்ணயித்தது. அடுத்து 193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தை பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார். அத்துடன் டபிள்யூ. பி.எல். கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 

மும்பை அணி வீராங்கனையும் இங்கிலாந்து ஆல்ரவுண்டருமான நாட் ஸ்கைவர்-பிரண்ட் இந்த சாதனையை முதன்முதலில் அடைந்தார். இப்போது அவர் 1,101 ரன்களுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்