தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: ஷிவம் துபே வழங்கினார்

ஊக்கத் தொகை வழங்கும் விழா எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.;

Update:2025-04-23 03:30 IST

சென்னை,

தமிழக இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி பேட்ஸ்மேனுமான ஷிவம் துபே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), வெனிசா ஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வெல்லச்சாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜெயந்த், நந்தனா (இருவரும் கிரிக்கெட்), கமலி (அலைச்சறுக்கு), அபிநயா, ஜித்தின் அர்ஜூனன் (இருவரும் தடகளம்), தக்ஷந்த் (செஸ்) ஆகியோருக்கு தலா ரூ.70 ஆயிரம் விதம் மொத்தம் ரூ.7 லட்சமும் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்