ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்ற சுப்மன் கில்
தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.;
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.
அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த நிலையில் இந்தியடெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் . இந்த விருதை கில் ஏற்கனவே 3 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் சோபியா டன்க்லி ஜூலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார்