சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

4வது டி20 போட்டி நேற்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது;

Update:2025-12-29 08:07 IST

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி நேற்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தநா 80 ரன்கள் (48 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

3 சிக்சர் பறக்க விட்ட மந்தனாவின் சிக்சர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் (78 சிக்சர்) இருந்து பறித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்