உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.;

Update:2025-10-12 19:09 IST

விசாகப்பட்டினம்,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 48.5 ஓவரில் இந்திய அணி 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா உலக சாதனை படைத்துள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 1000* ரன்கள் அடித்த முதல் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உலக சாதனை படைத்துள்ளார்.

நடப்பாண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 1000 ரன்களை கடந்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்