டி20 கிரிக்கெட்: முதல் வீரராக வரலாறு படைத்த ரஷித் கான்

தி ஹண்ட்ரட் தொடரில் ரஷித் கான் இந்த சாதனையை படைத்தார்.;

Update:2025-08-08 19:32 IST

image courtesy:PTI

லண்டன்,

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் - ஓவல் இன்விசிபில் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் 18.4 ஓவர்களில் 80 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக டர்னர் 21 ரன்கள் அடித்தார். ஓவல் தரப்பில் ரஷித் கான், சாம் கர்ரன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் ரஷித்கான் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651 -ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் 650 விக்கெட்டை கடந்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். 478 இன்னிங்ஸ்களில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஓவல் அணி 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்