டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார்.;

Update:2025-11-05 13:43 IST

image courtesy: @windiescricket 

ஆக்லாந்து,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீசின் தொடக்க வீரர்களாக பிரண்டன் கிங் மற்றும் அலிக் அத்தானஸ் களம் இறங்கினர்.

இதில் பிரண்டன் கிங் 3 ரன்னிலும், அலிக் அத்தானஸ் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிலையில் 53 ரன்னிலும், அக்கீம் அகஸ்டே 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ரோஸ்டன் சேஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். இதில் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஹோல்டன் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்