20 ஓவர் உலக கோப்பை: வங்காளதேச அணி அதிரடி நீக்கம்- புதிய அணி சேர்ப்பு

. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்கதேசம் தொடரைப் புறக்கணித்து இருந்தது.;

Update:2026-01-24 17:53 IST

துபாய்,

இந்தியாவில் நடைபெறவுள்ள  - 20  ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்கதேசம் தொடரைப் புறக்கணித்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  அறிவித்துள்ளது. ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் அந்த அழைப்பை ஏற்றால் இந்த மாற்றம் அதிகாரப்பூர்வமாக மாறும். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்