20 ஓவர் உலக கோப்பையில் ஆடாவிட்டால் வங்காளதேசத்துக்குதான் நஷ்டம்- அசாருதீன்

Update:2026-01-24 21:57 IST

Photo Credit: PTI

புதுடெல்லி, 

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று வங்காளதேசம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இதன் காரணமாக, அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட இந்தியாவுக்கு வர மறுத்தால், வங்காளதேசத்துக்குத்தான் நஷ்டம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக வங்காளதேசம் கூறுவதன் காரணம் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போது நியூசிலாந்து அணி இந்தியாவில் 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. அதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணியும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த அணிகளில் எதுவும் இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக புகார் தெரிவிக்கவில்லை.இந்தியா வீரர்கள் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான சூழலை வழங்கும் நாடாகும்.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக வங்காளதேச அணி இந்தியாவுக்கு வர மறுத்தால், அதனால் ஏற்படும் நஷ்டம் வங்காளதேச அணிக்குத்தான். உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே தயாராகிவிட்ட நிலையில், இடமாற்றம் செய்வது மிகவும் கடினம்.இவ்வாறு முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்