இந்திய அணியின் பயிற்சியாளராக விருப்பமா? கில்லெஸ்பி பதில்

இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.;

Update:2026-01-02 14:59 IST

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதில் கவுகாத்தியில் நடந்த 2-வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான தோல்வி இதுவாகும்.

கடந்த ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 0-3 என்ற கணக்கில் முதல்முறையாக பறிகொடுத்தது. உள்நாட்டில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பணியாற்றுகிறார். அவரது பயிற்சியின் கீழ் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி பிரமாதமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சரிவுக்குள்ளாகி இருக்கிறது.

இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் புதிய பயிற்சியாளரைநியமிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியிடம் இந்திய அணியின் பயிற்சியளராக விருப்பமா என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கில்லெஸ்பி, ‘பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நான் இருந்தேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னிடம் எதுவும் ஆலோசிக்காமல் சீனியர் உதவி பயிற்சியாளரை நீக்கியது. ஒரு தலைமை பயிற்சியாளராக இதை என்னால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற பல அவமதிப்புகளை சந்தித்தேன். அதனால் தான் விலகினேன்’ என்றார்.

‘இந்திய அணி அவர்களது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவி வருகிறது. இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்துள்ளனர். அதனால் இந்திய டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக நீங்கள் செயல்பட வேண்டும். உங்களது பயிற்சி இந்திய அணிக்கு தேவைப்படுகிறது’ என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு கில்லெஸ்பி,வேண்டாம்.... நன்றி கூறி பின்வாங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்