தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 4-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி...

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.;

Update:2025-12-17 03:24 IST

லக்னோ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கு முன்னர் நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 117 ரன்னில் இந்திய அணி சுருட்டி அசத்தியது.

அதே உத்வேகத்துடன் தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்காத இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பினால், பேட்டிங் மேலும் வலுவடையும்.

அதே சமயம் பேட்டிங்கில் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய தீவிரம் காட்டும். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும். இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்