ஆஷஸ் 3வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
3-வது ஆஷஸ் டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.;
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்ட் களமிறங்கினர். ஹெட் 10 ரன்னிலும், ஜேக் 18 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய லபுஸ்சேன், உஸ்மான் குவாஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 21 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. லபுஸ்சேன் 16 ரன்னிலும், குவாஜா 28 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.